வரலாற்றில் இன்று 16.02.2017

பெப்ரவரி 16 கிரிகோரியன் ஆண்டின் 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 318 (நெட்டாண்டுகளில் 319) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1568 – நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
1796 – ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடாத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
1918 – லித்துவேனியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1937 – வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் பிலிப்பீன்சின் கொரெகிடோர் தீவில் தரையிறங்கினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.
1945 – அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
1947 – 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.
1959 – ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
1961 – எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.
1983 – ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 71 பேர் கொல்லப்பட்டனர்.
1985 – ஹெஸ்புல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1986 – சோவியத் கப்பல் மிகைல் லெர்மொண்டொவ் நியூசிலாந்தில் மூழ்கியது.
1988 – சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
2005 – கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
2007: 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

பிறப்புகள்

1834 – ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், செருமானிய உயிரியலாளர், மெய்யியலாளர் (இ. 1919)
1909 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவர் (இ. 1969)
1934 – தெளிவத்தை ஜோசப், ஈழத்து எழுத்தாளர்
1941 – கிம் ஜொங்-இல், வட கொரிய தலைவர் (இ. 2011)
1978 – வசீம் ஜாஃபர், இந்தியத் துடுப்பாளர்

இறப்புகள்

1656 – தத்துவ போதக சுவாமிகள் (றொபேட் டீ நொபிலி), கத்தோலிக்கக் குரு, தமிழ்நாட்டில் சமயப்பணி ஆற்றியவர் (பி. 1577)
1885 – வீ. இராமலிங்கம், ஈழத்துப் புலவர்.
1944 – தாதாசாகெப் பால்கே, இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் (பி. 1870)
1954 – டி. கே. சிதம்பரநாத முதலியார், தமிழக எழுத்தாளர் (பி. 1882)
1988 – விஜய குமாரதுங்க, சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1945)
1990 – கெய்த் ஹேரிங், அமெரிக்க ஓவியர் (பி. 1958)

சிறப்பு நாள்

லித்துவேனியா – விடுதலை நாள் (1918)

LEAVE A REPLY