வரலாற்றில் இன்று 15.06.2018

ஜூன் 15 கிரிகோரியன் ஆண்டின் 166 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 167 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 199 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 763 – மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றுக் காலக்கோட்டைக் கண்டறிய உதவிய சூரிய கிரகணம் ஒன்றை அசீரியர்கள் பதிந்தார்கள்.
923 – பிரான்சின் முதலாம் ரொபேர்ட் மன்னன் கொல்லப்பட்டான்.
1184 – நோர்வேயின் ஐந்தாம் மாக்னஸ் மன்னன் ஃபிம்ரெயிட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.
1246 – இரண்டாம் பிரெடெரிக்கின் இறப்புடன் ஆஸ்திரியாவின் பாபன்பேர்க் அரச வம்சம் அழிந்தது.
1389 – கொசோவோவில் இடம்பெற்ற சமரில் ஒட்டோமான் படைகள் செர்பியர்களையும், பொஸ்னியர்களையும் தோற்கடித்தனர்.
1667 – சான் பாப்டிஸ்ட் டெனிஸ் என்ற பிரெஞ்ச் மருத்துவர் முதன் முதலில் மனித இரத்த மாற்றீட்டை செயற்படுத்தினார்.
1752 – மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்.
1775: அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தரைப்படைத் தளபதியாக நியமனம் பெற்றார்.
1808 – ஜோசப் பொனபார்ட் ஸ்பெயின் மன்னனாக முடி சூடினான்.
1836 – ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்காவின் 25வது மாநிலமானது.
1844 – இறப்பர் பதப்படுத்தும் முறை (vulcanization) சார்ல்ஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
1846 – இலங்கையின் ரோயல் ஏசியாட்டிக் சபை என்ற அமைப்பு தனது முதலாவது இதழை வெளியிட்டது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியாவின் பீட்டர்ஸ்பேர்க் நகர் அமெரிக்கப் படைகளின் முற்றுகைக்குள்ளானது.
1904 – நியூ யோர்க்கில் ஜெனரல் ஸ்லோகம் என்ற கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 1021 பேர் கொல்லப்பட்டனர்.
1911 – ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
1938 – பிரித்தானியாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாக்களைக் கண்டுபிடித்தார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் சாய்ப்பான் தீவை கைப்பற்றினர்.
1954 – ஐரோப்பிய உதைப்பந்தாட்டக் கூட்டமைப்பு யூஏஃபா சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது.
1984 – யாழ்ப்பாணம் காரைநகரில் இலங்கையின் கடல் விமானம் ஒன்று விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1996 – ஐக்கிய இராச்சியம், மான்செஸ்டரில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலில் 200 பேர் காயமடைந்தனர். நகரின் மத்திய பகுதி பெரும் சேதத்துக்குள்ளானது.
2007 – உலகின் மிகவும் நீளமான 34 கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலைக்குக் கீழாக அமைக்கப்பட்டது.
2009 – ரிச்மண்ட் ஹில் முருகன் கோவில் கொடியேற்றம்.
2009 – ஸ்காபோரோ பெரிய சிவன் கோவில் தீர்த்தம்.

பிறப்புகள்

1914 – யூரி அந்திரோப்பொவ், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் (இ. 1984)
1950 – லக்ஸ்மி மிட்டால், லண்டனைச் சேர்ந்த உலகச் செல்வந்தர்களில் ஒருவர்.
1953 – உமர் தம்பி, தமிழ்க் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (இ. 2006)

இறப்புகள்

1838 – ரோணியஸ், ஜெர்மனியத் தமிழறிஞர் (பி. 1790)
1849 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அதிபர் (பி. 1795)
1948 – ராஜா சர் அண்ணாமலை செட்டியார், (பி. 1881)
1971 – வெண்டல் ஸ்டான்லி, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1904)
2008 – தங்கம்மா அப்பாக்குட்டி, ஈழத்தின் ஆன்மிகவாதி (பி. 1925)
2013 – மணிவண்ணன், பிரபல தமிழ் நடிகர் திரைப்பட இயக்குனர் (பி. 1953)

சிறப்பு நாள்

டென்மார்க் – கொடி நாள்
உலக காற்று தினம் (World Wind Day)

LEAVE A REPLY