வரலாற்றில் இன்று 14.06.208

ஜூன் 14  கிரிகோரியன் ஆண்டின் 165 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 166 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 200 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1789 – பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.
1800 – நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.
1807 – நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் போலந்தின் பிரீட்லாந்து என்ற இடத்தில் ரஷ்யப் படைகளுடன் மோதி வெற்றி பெற்றனர்.
1821 – வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி என்பவன் ஒட்டோமான் பேரரசின் தளபதி இஸ்மயில் பாஷாவிடம் சரணடைந்ததன் மூலம் சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது.
1846 – கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாவைக் குடியரசாக அறிவித்தனர்.
1872 – கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.
1900 – ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.
1931 – பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியது.
1940 – போலந்தின் 728 போர்க் கைதிகள் நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.
1941 – அனைத்து ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.
1941 – எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியம் நாட்டை விட்டு அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.
1962 – ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.
1967 – சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.
1967 – மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.
1982 – போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.
1985 – TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.
1999 – தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.
2002 – கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.
   2003 – விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
2007 – காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.

பிறப்புகள்

1899 – யசுனாரி கவபட்டா, நோபல் பரிசு பெற்ற யப்பானிய எழுத்தாளர் (இ. 1972)
1928 – அ. வின்சென்ட், திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (இ. 2015)
1929 – சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர் (இ. 1967)
1969 – ஸ்ரெஃபி கிராஃப், ஜெர்மனிய டென்னிஸ் வீராங்கனை

இறப்புகள்

   1965 – கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (பி. 1902)
2012 – காகா ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர்

சிறப்பு நாள்

போக்லாந்துத் தீவுகள் – விடுதலை நாள்
ஐக்கிய அமெரிக்கா – கொடி நாள்
ஆப்கானிஸ்தான் – அன்னையர் நாள்
உலக இரத்த வழங்கல் நாள்
உலக வலைப்பதிவர் நாள்

LEAVE A REPLY