வரலாற்றில் இன்று 14.03.2020

மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டின் 73 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 74 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 292 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1489 – சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார்.
1794 – எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1898 – டாக்டர் வில்லியம் கப்ரியேல் றொக்வூட், இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 248 பேர் கொல்லப்பட்டனர்.
1939 – செக்கோசிலவாக்கியாவின் பொஹேமியா மற்றும் மொராவியா மாகாணங்களை ஜேர்மனியப் படைகள் ஆக்கிரமித்தனர்.
1951 – கொரியப் போர்: இரண்டாவது முறையாக ஐ.நா படைகள் சியோல் நகரைக் கைப்பற்றியது.
1978 – இஸ்ரேலியப் படைகள் தெற்கு லெபனானை ஆக்கிரமித்துக் கைப்பற்றியது.
1979 – சீனாவில் பெய்ஜிங் நகரில் விமானம் ஒன்று தொழிற்சாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1984 – சின் ஃபெயின் தலைவர் ஜெரி ஆடம்ஸ் பெல்ஃபாஸ்ட் நகரில் கொலை முயற்சி ஒன்றில் படுகாயமடைந்தார்.
1994 – லினக்ஸ் கரு (kernel) 1.0.0 வெளியிடப்பட்டது.
1995 – ரஷ்ய விண்கப்பல் ஒன்றில் அமெரிக்கர் (நோர்மன் தகார்ட்) ஒருவர் முதன் முதலாகப் பயணித்தார்.
1998 – தெற்கு ஈரானில் 6.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.
2007 – மேற்கு வங்காளம், நந்தி கிராமத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – முதல் உலக கணக்கு தினம் கொண்டாடப்பட்டது.

பிறப்புக்கள்

1879 – அல்பர்ட் ஐன்ஸ்டீன், இயற்பியலாளர் (இ. 1955)
1918 – கே. வி. மகாதேவன், இசையமைப்பாளர் (இ. 2001),
1965 – அமீர் கான், நடிகர்

இறப்புக்கள்

1883 – கார்ல் மார்க்ஸ், ஜெர்மனிய மெய்யியலாளர் (பி. 1818)
1932 – ஜோர்ஜ் ஈஸ்ற்மன் அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (பி. 1854)
1995 – வில்லியம் பவுலர், இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)

சிறப்பு நாள்

பை நாள்

LEAVE A REPLY