வரலாற்றில் இன்று 13.02.2020

பெப்ரவரி 13 கிரிகோரியன் ஆண்டின் 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1258 – பக்தாத் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
1668 – ஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது.
1755 – ஜாவாவின் மடாரம் பேரரசு “யோக்யகர்த்தா சுல்தானகம்” மற்றும் “சுரகர்த்தா சுல்தானகம்” என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1880 – எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார்.
1914 – பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.
1934 – சோவியத் நீராவிக்கப்பல் செலியூஷ்கின் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்லரின் நாசிப் படைகளிடம் இருந்து மீட்டன.
1960 – பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.
1971 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.
1974 – நோபல் பரிசு பெற்ற அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
1975 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் தீ பரவியது.
1978 – சிட்னியில் ஹில்டன் உணவகத்தின் முன் குண்டு வெடித்ததில் ஒரு காவற்படை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
1984 – கான்ஸ்டன்டீன் செர்னென்கோ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார்.
1985 – கொக்கிளாய் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
1990 – இரண்டு ஜெர்மனிகளும் இணைவது குறித்த இரண்டு-கட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
1996 – நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
2001 – எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1879 – சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை (இ. 1949)
1910 – வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)
1920 – அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)
1934 – வெ. யோகேசுவரன்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1989)
1937 – ரூப்பையா பண்டா, சாம்பிய அரசுத்தலைவர்

இறப்புகள்

1883 – ரிச்சார்ட் வாக்னர், செருமானிய இயக்குனர், இசையமைப்பாளர் (பி. 1813)
1950 – செய்குத்தம்பி பாவலர், தமிழறிஞர் (பி. 1874)
2009 – கிருத்திகா, தமிழக எழுத்தாளர்
2014 – பாலுமகேந்திரா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் (பி. 1939)

சிறப்பு நாள்

உலக வானொலி நாள்

LEAVE A REPLY