வரலாற்றில் இன்று 10.05.2020

மே 10 கிரிகோரியன் ஆண்டின் 130 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 131 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1503 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் கேமான் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.
1612 – ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான்.
1768 – மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.
1774 – பதினாறாம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
1796 – ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.
1796 – பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.
1810 – ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைப்பற்றப்பட்டார்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தளபதியான வில்லியம் குவாண்ட்ரில் என்பவரை கென்டக்கி என்ற இடத்தில் தாக்கி படுகாயப்படுத்தினர். இவர் ஜூன் 6 இல் இறந்தார்.
1871 – பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.
1877 – ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1908 – அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது குண்டு இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் வீழ்ந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது.
1940 – வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐஸ்லாந்தினுள் ஊடுருவியது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படையின் தாக்குதலில் லண்டனில் கீழவை நாடாளுமன்றம் (House of Commons) சேதத்துக்குள்ளாகியது.
1946 – ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.
1979 – மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.
1993 – தாய்லாந்தில் விளையாடுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1994 – நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
1996 – எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் கொல்லப்பட்டனர்.
1997 – ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தனர்.
2001 – கானாவில் உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 120 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1932 – கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 2011)
1946 – பிருட்டே கால்டிகாசு, ஜெர்மனிய ஆய்வாளர்
1963 – ஆ. ராசா இந்திய அரசியல்வாதி.
1981 – நமிதா கபூர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

2003 – கோபி கிருஷ்ணன், எழுத்தாளர் (பி. 1945)

சிறப்பு நாள்

ஐக்கிய அமெரிக்கா – வானியல் நாள்
ஹங்கேரி – பறவைகள் மற்றும் மரங்களின் நாள்
இசுரேல் – தேசிய விடுமுறை
தென் கொரியா – பெற்றோர் நாள்

LEAVE A REPLY