வரலாற்றில் இன்று 09.07.2018

சூலை 9 (July 9) கிரிகோரியன் ஆண்டின் 190 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 191 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 175 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

455 – அவிட்டஸ் மேற்கு ரோமப் பேரரசின் மன்னனானான்.
1357 – புனித ரோமப் பேரரசர் நான்காம் சார்ல்ஸ் பிராகா நகரத்தில் சார்லஸ் பாலத்திற்கு அடித்தளம் நாட்டினார்.
1755 – பென்சில்வேனியாவில் பிரெஞ்சு மற்றும் குடியேற்ற துணை இராணுவக் குழு பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
1790 – பால்ட்டிக் கடலில் இடம்பெற்ற மோதலில் சுவீடனின் கடற்படயினர் ரஷ்யக் கப்பல்களை பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றினர்.
1810 – ஒல்லாந்து நாட்டை நெப்போலியன் தனது பிரெஞ்சு இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டான்.
1816 – ஆர்ஜென்டீனா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஹட்சன் துறைமுகம் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது.
1868 – அனைத்து ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும் முழுக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.
1900 – ஆஸ்திரேலிய கண்டத்தில் தனித்தனியே குடியேற்ற நாடுகளாக இருந்த மாநிலங்கள் ஆஸ்திரேலியப் பொதுநலவாயத்தின் கீழ் ஒன்றிணைக்க விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்தார்.
1903 – யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் அமைப்பு (YMHA) உருவாக்கப்பட்டது.[1]
1918 – டென்னசியில் நாஷ்வில் என்ற இடத்தில் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் 101 பேர் கொல்லப்பட்டு 171 பேர் படுகாயமடைந்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிசிலி மீதான தாக்குதலை ஆரம்பித்தனர்.
1948 – பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது.
1956 – யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், பெருமாள் கோயில் ஆகியன தாழ்த்தப்பட்டோரின் வழிபாட்டுக்காகத் திறந்து விடப்பட்டன.[2]
1982 – ஐக்கிய அமெரிக்க போயிங் விமான லூசியானாவின் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 146 பேரும் தரையில் இருந்த 8 பேரும் கொல்லப்பட்டனர்.
1991 – 30 ஆண்டுகளின் பின்னர் தென்னாபிரிக்கா ஒலிம்பிக் விளையாட்டுக்களில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
1995 – யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
    1995 – யாழ்ப்பாணத்தில் நவாலி பேதுருவானவர் தேவாலயம் மீது இலங்கை விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 141 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2002 – ஆபிரிக்க ஒன்றியம் அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது. தென்னாபிரிக்க அதிபர் தாபோ உம்பெக்கி இவ்வமைப்பின் முதலாவது தலைவரானார்.
2006 – சைபீரியாவில் 200 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 122 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – 2006 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி பிரான்சை வென்று நான்காவது தடவையாக உலகக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.
2006 – அக்னி III ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது அடுக்கு இயங்க மறுத்தமையால் குறுகிய தூரத்தையே சென்றடைந்தது.

பிறப்புகள்

1930 – கே. பாலச்சந்தர், தமிழ் திரைப்பட இயக்குநர், (இ. 2014)
1956 – டொம் ஹாங்க்ஸ், அமெரிக்க ஹாலிவுட் நடிகர்

இறப்புகள்

2009 – சி. ஆர். கண்ணன், தமிழக எழுத்தாளர்

சிறப்பு நாள்

ஆர்ஜென்டீனா – விடுதலை நாள் (1816)

LEAVE A REPLY