வரலாற்றில் இன்று 09.05.2020

மே 9 கிரிகோரியன் ஆண்டின் 129 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 130 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 236 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1502 – கொலம்பஸ் புதிய உலகிற்கான தனது கடைசிப் பயணத்தை (1502-1504) ஸ்பெயினில் இருந்து தொடங்கினார்.
1671 – ஐரிஷ் இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான்.
1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி (omnibus) பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1901 – அவுஸ்திரேலியாவின் முதலாவது நாடாளுமன்றம் மெல்பேர்னில் திறந்துவைக்கப்பட்டது.
1914 – துடுப்பாட்டத்தில் 3000 முதற்தர விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையை ஜாக் ஹேர்ண் பெற்றார்.
1919 – இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது. அரிசிப் பாவனை மாதமொன்றிற்கு சராசரியாக 30,000 தொன் இலிருந்து 20,000 ஆகக் குறைக்கப்பட்டது.
1920 – போலந்து இராணுவம் உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றிய வெற்றி நிகழ்வு கிரெசாட்டிக் நகரில் இடம்பெற்றது.
1927 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றம் திறந்துவைக்கப்பட்டது.
1933 – மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.
1936 – இத்தாலி அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எதியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாடு உருவாகியது.
1940 – இரண்டாம் உலகப் போர்: டென் ஹெல்டர் என்ற இடத்தில் பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பலை ஜெர்மனிய யு-9 நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்தது.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் யு-110 நீர்மூழ்கிக்கப்பலை பிரித்தானியக் கடற்படையினர் தாக்கிக் கைப்பற்றினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: உக்ரேனில் சின்கிவ் நகரில் 588 யூதர்கள் நாசிகளினால் கொல்லப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினில் கடைசி ஜெர்மன் படைகள் சோவியத் தளபதி கியோர்கி சூக்கொவ் இடம் சரணடைந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவில் நிலை கொண்டிருந்த ஜெர்மனியப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தனர். சிலொவேனியாவில் போர் முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனிய இராணுவத் தளபதி ஹேர்மன் கோரிங் அமெரிக்க இராணுவத்தால் கைப்பற்றப்பட்டான்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்ட நோர்வேயின் அதிபராக இருந்த விட்குன் உயிஸ்லிங் நோர்வேயில் கைது செய்யப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் பிராக் நகரை அடைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: கால்வாய் தீவுகள் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டன.
1945 – கிழக்குப் போர்முனை: இரண்டாம் உலகப் போர் ஐரோப்பாவில் முடிவுக்கு வந்தது.
1955 – பனிப்போர்: மேற்கு ஜெர்மனி நேட்டோவில் இணைந்தது.
1956 – உலகின் 8-வது உயரமான மலையான மனஸ்லுவின் உச்சி முதன் முதலாக ஜப்பானிய மலையேறிகளால் எட்டப்பட்டது.
1980 – புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
1985 – காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
1987 – போலந்து பயணிகள் விமானம் வார்சாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 183 பேர் கொல்லப்பட்டனர்.
1988 – கன்பராவில் அவுஸ்திரேலியாவின் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
2002 – ரஷ்யாவில் காஸ்பீஸ்க் என்ற இடத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
2004 – செச்னியா அதிபர் அகமது காதீரொவ் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
2007 மே 09ம் தேதி தினகரன் தமிழ் நாளிதழில் வெளியான சர்வே காரணமாக திராவிட முன்னேற்ற கழகத்தில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னையால் மதுரையில் இருந்த தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டதில் தினகரன் ஊழியர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1408 – அன்னமாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர் (இ. 1503)
1866 – கோபால கிருஷ்ண கோகலே இந்திய சுதந்திர போராட்ட வீரர், (இ.1915)
1954 – மல்லிகா சாராபாய் இந்திய சமூக ஆர்வலர்.
சிறப்பு நாள்

ரஷ்யா – வெற்றி நாள் (1945)
ஆர்மேனியா – வெற்றி நாள்
ஐரோப்பிய ஒன்றியம் – ஐரோப்பிய நாள்

LEAVE A REPLY