வரலாற்றில் இன்று 09.04.2018

ஏப்ரல் 9 கிரிகோரியன் ஆண்டின் 99 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 100 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 266 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1241 – மங்கோலியப் படைகள் போலந்து மற்றும் ஜெர்மனியப் படைகளைத் தாக்கி தோற்கடித்தனர்.
1413 – ஐந்தாம் ஹென்றி இங்கிலாந்து மன்னனாக மூடிசூடினான்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ரொபேர்ட் லீ தனது 26,765 பேருடனான படைகளுடன் வேர்ஜீனியாவில் சரணடைந்ததில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: நோர்வே, மற்றும் டென்மார்க் மீது ஜெர்மனி தாக்குதலைத் தொடுத்தது.
1947 – டெக்சாஸ், ஒக்லகோமா, மற்றும் கன்சாஸ் மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் கொல்லப்பட்டனர். 970 பேர் காயமடைந்தனர்.
1948 – ஜெருசலேம் நகரில் டெயிர் யாசின் என்ற கிராமத்தில் 120 அரபு மக்கள் இஸ்ரேலியரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1953 – வார்னர் பிறதேர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான “ஹவுஸ் ஒவ் வக்ஸ்” (House of Wax) இனை வெளியிட்டது
1959 – மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது.
1967 – முதல் போயிங் 737 பறப்பு.
1984 – யாழ்ப்பாணம் அடைக்கல மாதா கோயில் இராணுவத்தினரின் றொக்கட் தாக்குதலுக்கு உள்ளானது.
1984 – ஸ்ரீ லங்கா கஜபா றெஜிமென்ட் இராண்வ வண்டி மீது யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 19 படையினர் கொல்லப்பட்டனர்.
1991 – ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.
1992 – முன்னாள் பனாமா அதிபர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது.
1999 – நைஜர் அதிபர் இப்ராகிம் மைனசாரா படுகொலை செய்யப்பட்டார்.
2003 – ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

பிறப்புகள்

1968 – ஜெய் சந்திரசேகர், அமெரிக்க நடிகர்

இறப்புகள்

1626 – சேர். பிரான்சிஸ் பேகன், ஆங்கில தத்துவவாதி (பி. 1561)
1959 – பிராங்க் லாய்டு ரைட், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (பி. 1867)

LEAVE A REPLY