வரலாற்றில் இன்று 09.02.2020

பெப்ரவரி 9 (February 9) கிரிகோரியன் ஆண்டின் 40 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 325 (நெட்டாண்டுகளில் 326) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1822 – ஹெயிட்டி புதிதாக அமைக்கப்பட்ட டொமினிக்கன் குடியரசை முற்றுகையிட்டது.
1885 – முதலாவது ஜப்பானியர் ஹவாய் தீவை வந்தடைந்தனர்.
1895 – வில்லியம் மோர்கன் volleyball ஐக் கண்டுபிடித்தார்.
1897 – பெனின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1900 – இலங்கையிலும், இந்தியாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
1900 – டேவிஸ் கோப்பை டென்னிஸ் பந்தயம் ஆரம்பிக்கப்பட்டது.
1904 – போர்ட் ஆர்தர் சமர் ஆரம்பித்தது.
1942 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1962 – பொதுநலவாய அமைப்பினுள் ஜமெய்க்கா விடுதலை பெற்றது.
1965 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்க தாக்குதல் படைப்பிரிவு முதற்தடவையாக தென் வியட்நாமிற்கு அனுப்பப்பட்டது.
1969 – போயிங் 747 விமானத்தின் முதற் சோதனைப் பறப்பு மேற்கொள்ளப்பட்டது.
1971 – கலிபோர்னியாவில் 6.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1971 – அப்பல்லோ 14 விண்கலம் மூன்று அமெரிக்கர்களுடன் பூமி திரும்பியது.
1975 – சோயூஸ் 17 விண்கலம் பூமி திரும்பியது.
1986 – ஹேலியின் வால்மீன் சூரியனுக்கு அண்மையில் எட்டரைக் கோடி கிமீ தூரத்தில் வந்தது.
1991 – லித்துவேனியாவில் விடுதலைக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்தார்கள்.
1996 – ஐரிஷ் குடியரசு இராணுவம் தனது 18 மாத யுத்த நிறுத்த உடன்பாட்டினை முறித்துக்கொண்ட சில மணி நேரத்தில் லண்டனில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1737 – தாமஸ் பெய்ன், ஆங்கிலேய-அமெரிக்க மெயுஇயலாளர், எழுத்தாளர் (இ. 1809)
1773 – வில்லியம் ஹென்றி ஹாரிசன், ஐக்கிய அமெரிக்காவின் 9வது அரசுத்தலைவர் (இ. 1841)
1873 – பம்மல் சம்பந்த முதலியார், தமிழ் நாடகத் தந்தை (இ. 1964)
1910 – ஜாக்குவஸ் மோனாட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரிவேதியியலாளர், மருத்துவர் (இ. 1976)
1919 – மதுரை சோமு, தமிழகக் கருநாடக இசைப் பாடகர் (இ. 1989)
1929 – ஏ. ஆர். அந்துலே, மகாராட்டிராவின் 8வது முதலமைச்சர் (இ. 2014)
1934 – சி. பஞ்சரத்தினம், இந்திய இயற்பியலாளர் (இ. 1969)
1940 – ஜே. எம். கோட்ஸி, நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர்
1943 – ஜோசப் ஸ்டிக்லிட்சு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
1944 – ஆலிஸ் வாக்கர், அமெரிக்க எழுத்தாளர்
1945 – இயோசினோரி ஓசூமி, நோபல் பரிசு பெற்ற சப்பானிய உயிரியலாளர்
1950 – ஆதி குமணன், மலேசிய எழுத்தாளர் (இ. 2005)
1964 – ம. ஆ. சுமந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
1970 – கிளென் மெக்ரா, ஆத்திரேலியத் துடுப்பாளர்
1981 – டாம் ஹிடில்ஸ்டன், ஆங்கிலேய நடிகர்
1989 – சரண்யா மோகன், இந்தியத் திரைப்பட நடிகை.

இறப்புகள்

1881 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, உருசிய புதின எழுத்தாளர் (பி. 1821)
1966 – மு. செல்லையா, ஈழத்துக் கவிஞர் (பி. 1906)
1977 – ஜி. ஜி. பொன்னம்பலம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (பி. 1901)
1981 – எம். சி. சாக்ளா, இந்திய அரசியல்வாதி (பி. 1900)
1984 – பாலசரஸ்வதி, தமிழக பரதநாட்டியக் கலைஞர் (பி. 1918)
1986 – ச. ராஜாபாதர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொதுவுடமைவாதி (பி. 1916)
1987 – லூயிஸ் ஹாம்மெட், அமெரிக்க வேதியியலாளர் (பி. 1894)
1989 – ஒசாமு தெசூகா, சப்பானிய கேலிப்பட ஓவியர் (பி. 1928)
1996 – சிட்டி பாபு, தென்னிந்திய வீணைக் கலைஞர் (பி. 1936)
2001 – சாவி, எழுத்தாளர் (பி. 1916)
2008 – பாபா ஆம்தே, இந்திய சமூக சேவகர் (பி. 1914)
2010 – செல்லையா மெற்றாஸ்மயில், ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர்
2011 – வ. விஜயபாஸ்கரன், தமிழக எழுத்தாளர் (பி. 1926)
2011 – எஸ். வி. ராமகிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (பி. 1936)
2012 – ஹெப்சிபா ஜேசுதாசன், புதின எழுத்தாளர். (பி. 1925)
2013 – அஃப்சல் குரு, இந்தியத் தீவிரவாதி
2013 – மலர் மன்னன், பத்திரிகையாளர், எழுத்தாளர்
2016 – சுசில் கொய்ராலா, நேப்பாளத்தின் 37வது பிரதமர் (பி. 1939)

LEAVE A REPLY