வரலாற்றில் இன்று 08.04.2020

மார்ச் 8 கிரிகோரியன் ஆண்டின் 67 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 68 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 298 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1618 – ஜொஹான்னெஸ் கெப்லர் கோள்களின் இயக்கங்களுக்கான மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார்.
1761 – வடக்கு லண்டனில் ஹாம்ப்ஸ்டட் நகரில் நிலநடுக்கம் பதியப்பட்டது.
1782 – ஐக்கிய அமெரிக்காவின் ஒகைய்யோ மாநிலத்தில் கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய 90 அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் பென்சில்வேனியாவின் துணை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 68 பேர் குழந்தைகளும் பெண்களுமாவர்.
1817 – நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
1906 – பிலிப்பைன்சில் அமெரிக்கத் துருப்புக்களால் ஏறத்தாழ 600 ஏதிலிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
1911 – அனைத்துலக மகளிர் நாள் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
1917 – ரஷ்யாவில் பெப்ரவரிப் புரட்சி (பெப்ரவரி 13 – பழைய நாட்காட்டியில்) ஆரம்பம்.
1921 – ஸ்பெயின் பிரதமர் எடுவார்டோ டாட்டோ மாட்ரிட்டில் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
1924 – யூட்டாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 172 பேர் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜாவாவில் ஜப்பானியப் படைகளிடம் டச்சுப் படைகள் சரணடைந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: பர்மாவின் ரங்கூன் நகரை ஜப்பான் கைப்பற்றியது.
1950 – சோவியத் ஒன்றியம் தன்னிடம் அணுக்குண்டு இருப்பதாக அறிவித்தது.
1957 – எகிப்து சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது.
1965 – வியட்நாம் போர்: 3,500 அமெரிக்கப் படைகள் தென் வியட்நாமில் தரையிறங்கினர்.

பிறப்புக்கள்

1879 – ஓஒட்டோ ஹான், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1968)
1886 – எட்வர்ட் கெண்டல், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1972)
1908 – பாலகங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்.

இறப்புகள்

1922 – சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர், ஈழத்துப் புலவர் (பி. 1854
1923 – ஜொஹானஸ் வான் டர் வால்ஸ், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1837)
1974 – ஜே. பி. சந்திரபாபு, பாடகர், நடிகர் (பி. 1924)
2004 – அபூ அப்பாஸ், பாலஸ்தீன விடுதலை முன்னணி தாபகர் (பி. 1948)
2015 – கி. பி. அரவிந்தன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஈழ விடுதலைப் போராளி (பி. 1953)

சிறப்பு நாள்

அல்பானியா, ரோமானியா – அன்னையர் நாள்
ஐக்கிய நாடுகள்: அனைத்துலக மகளிர் நாள்

1 COMMENT

 1. அன்பார்ந்த அய்யா/அம்மையீர்
  வணக்கம்.இன்றைய வரலாற்றில் இன்று தகவல்களை சரிபார்க்கவும்.மார்ச்சு 8 ம் நாள் நிகழ்வுகளை தவறாக இன்று ஏப்ரல் மாதம் 8 என பதிந்துள்ளீர்கள்.தங்கள் பதிவில் இவ்வாறான பிழைகள் அடிக்கடி இடம் பெறுகின்றது.நான் இதற்கு முன்பே இவ்வாறான தவறுகளை தங்களின் கவனத்திற்கு இதே பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளேன்.
  தங்களின் இணையதளம் வழங்கும் வரலாற்றில் இன்று பதிவு அதி முக்கியத்துவம் வாய்ந்தது.வேலைவாய்ப்பு போட்டித்தேர்வினை எழுதுள்ள மாணவர்களுக்கு உதவிடும் நிலையில் இவ்வாறான தவறான தகவல் மூலம் பெறும் பாதிப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.உலகம் முழுவதும் உள்ள வாசகர்களால் வாசிக்கப்படும் இணையதள பதிவுகளை பலமுறை சரிபார்த பின் வெளியடுவது ஊடக அறம் எனபதனை கருத்தில் கொண்டு தங்கள் பதிவுகளை வெளியிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்
  தங்கள் அன்புள்ள
  அம்பிகாபதி
  [email protected]

LEAVE A REPLY