வரலாற்றில் இன்று 07.07.2018

சூலை 7 (July 7) கிரிகோரியன் ஆண்டின் 188 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 189 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 177 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1456 – ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
1543 – பிரான்ஸ் லக்சம்பேர்க்கை முற்றுகையிட்டது.
1799 – பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
1807 – பிரான்சின் நெப்போலியனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ரஷ்யாவின் டில்சிட் என்ற இடத்தில் எட்டப்பட்டது.
1865 – ஆபிரகாம் லிங்கன் கொலையில் குற்றவாளிகளான நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.
1896 – இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1898 – ஹவாய் தீவை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் முடிவில் அதிபர் வில்லியம் மக்கின்லி கைச்சாத்திட்டார்.
1917 – ரஷ்யப் புரட்சி: ரஷ்யாவின் இடைக்கால அரசின் பிரதமர் இளவரசர் கியோர்கி லுவோவ் பதவியைத் துறந்தார். அலெக்சாண்டர் கெரென்ஸ்கி பிரதமரானார்.
1937 – பசிபிக் போர்: ஜப்பானியப் படைகள் சீனாவின் பெய்ஜிங் நகரை அடைந்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் தலையீட்டைத் தடுப்பதற்காக அமெரிக்கப் படைகள் ஐஸ்லாந்தில் தரையிறங்கினர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பெய்ரூட் நகரம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
1953 – பொலிவியா ஊடாக பெரு, நிக்கராகுவா போன்ற நாடுகளுக்கான தனது பயணத்தை சே குவேரா ஆரம்பித்தார்.
1959 – வெள்ளிக் கோள் ரெகூலஸ் என்ற விண்மீனை மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன் வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.
1967 – பயாபிராவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1969 – கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலத்துடன் இணைந்து அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
1978 – சொலமன் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
2005 – லண்டனில் 4 சுரங்கத் தொடருந்து நிலையங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – சீனாவில் சுரங்கம் தோண்டுவதற்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ் மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பிறப்புகள்

1843 – கேமிலோ கொல்கி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய மருத்துவர் (இ. 1926)
1860 – குஸ்தாவ் மாலர், ஆத்திரிய இசையமைப்பாளர் (இ. 1911)
1907 – ராபர்ட் ஏ. ஐன்லைன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1988)
1926 – நுவான் சியா, கம்போடியாவின் அரசியல்வாதி
1942 – அ. பாலமனோகரன், ஈழத்து எழுத்தாளர்
1947 – ஞானேந்திரா, நேபாளத்தின் கடைசி மன்னர்
1964 – நபம் துக்கி, அருணாசலப் பிரதேசத்தின் 8வது முதலமைச்சர்
1973 – கைலாசு கேர், இந்திய இயக்குநர்
1981 – மகேந்திரசிங் தோனி, இந்தியத் துடுப்பாளர்

இறப்புகள்

1930 – ஆர்தர் கொனன் டொயில், பிரித்தானிய புனைகதை எழுத்தாளர் (பி. 1859)
1994 – கா. மு. ஷெரீப், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1914)
2006 – ஜி. வெங்கடசாமி, கண் மருத்துவர் (பி. 1918)
2014 – எதுவார்து செவர்துநாத்சே, சியார்ச்சியாவின் 2வது சனாதிபதி (பி. 1928)

சிறப்பு நாள்

சொலமன் தீவுகள் – விடுதலை நாள் (1978)

LEAVE A REPLY