வரலாற்றில் இன்று 06.05.2018

மே 6 கிரிகோரியன் ஆண்டின் 126 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 127 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 239 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1527 – ஸ்பானிய, மற்றும் ஜெர்மனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். 147 சுவீடன் படைகள் புனித ரோமப் பேரரசின் மன்னன் ஐந்தாம் சார்ள்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர்.
1542 – பிரான்சிஸ் சேவியர் கோவாவை அடைந்தார்.
1682 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் தனது கோட்டையை வேர்சாய் நகருக்கு மாற்றினான்.
1757 – பிரெடெரிக் தலைமையிலான புரூசியப் படைகள் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்து பிராக் நகரை முற்றுகையிட்டனர்.
1840 – பென்னி பிளாக் அஞ்சற்தலை ஐக்கிய இராச்சியத்தில் (அயர்லாந்து உட்பட) பயன்படுத்த அநுமதிக்கப்பட்டது.
1853 – “த லிட்டரறி மிரர்” (The Literary Mirror) என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார்.
1854 – இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.
1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
1860 – கரிபால்டி தனது தொண்டர் படைகளுடன் இரண்டு சிசிலிகளின் பேரரசைக் கைப்பற்றுவதற்காக ஜெனோவாவில் இருந்து புறப்பட்டான்.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஆர்கன்சஸ் அமெரிக்கக் கூட்டணியில் இருந்து விலகியது.
1889 – ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.
1910 – ஐந்தாம் ஜோர்ஜ் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடி சூடினான்.
1930 – இரானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 4,000 பேர் கொல்லப்பட்டனர்.
1937 – ஜெர்மனியின் ஹின்டென்பேர்க் என்ற வான்கப்பல் (zeppelin) நியூ ஜெர்சியில் தீப்பிடித்து அழிந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் நிலை கொண்டிருந்த கடைசி அமெரிக்கப் படைகள் ஜப்பானிடம் சரணடைந்தனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: கிழக்கு ஐரோப்பாவின் கடைசிப் பெரும் சமர் பிராக் நகரில் ஆரம்பமானது.
1967 – சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார்.
1976 – இத்தாலியின் ஃபிறியூல் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 989 பேர் கொல்லப்பட்டனர்.
1994 – ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
2001 – சிரியாவுக்கான தனது பயணத்தில் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் மசூதி ஒன்றிற்கு சென்றார். மசூதிக்குச்சென்ற முதலாவது திருத்தந்தை இவரேயாவார்.

பிறப்புக்கள்

1856 – சிக்மண்ட் பிராய்ட், ஆஸ்திரிய உளவியல் மருத்துவர் (இ. 1939)
1861 – மோதிலால் நேரு, இந்திய விடுதலை வீரர் (இ. 1931)
1904 – ஹரி மார்ட்டின்சன், சுவீடன் எழுத்தாளர் (இ. 1978)
1953 – டோனி ப்ளேர், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
1985 – கிரிஸ் பால், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1952 – மரியா மாண்ட்டிசோரி, இத்தாலிய கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர் (பி. 1870)

LEAVE A REPLY