வரலாற்றில் இன்று 02.05.2020

மே 2 கிரிகோரியன் ஆண்டின் 122 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 123 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 243 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1568 – ஸ்கொட்லாந்தில் லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினாள்.
1808 – மாட்ரிட் மக்கள் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1814 – முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.
1876 – பல்கேரியாவில் ஏப்ரல் கிளர்ச்சி ஆரம்பித்தது.
1885 – புல்ஜிய மன்னர் இரண்டாம் லெயொபோல்ட் கொங்கோ சுதந்திர நாட்டை அமைத்தான்.
1889 – எதியோப்பியாவின் அரசன் இரண்டாம் மெனெலிக் என்பவன் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
1928 – அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியரான வோல்ட் டிஸ்னி பிரபல கேலிச்சித்திரக் கதாபாத்திரமான மிக்கி எலியின் படத்தினை வரைந்தார்.
1933 – ஹிட்லர் தொழிற்சங்கங்களை தடை செய்தார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: பேர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஜெர்மனியப் படைகள் இத்தாலியில் சரணடைந்தனர்.
1952 – உலகின் முதலாவது ஜெட் விமானம், டி ஹாவிலண்ட் கொமெட் 1, முதற்தடவையாக லண்டனுக்கும் ஜொகான்னஸ்பேர்க் நகருக்கும் இடையில் பறந்தது.
1964 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கக் கப்பல் ஒன்று குண்டுவெடிப்பில் மூழ்கியது.
1964 – 8,027 மீட்டர் உயர ஷிஷபங்குமா மலையின் உச்சியை சீனாவின் இரு மலையேறிகள் எட்டினர்.
1982 – போக்லாந்து போர்: பிரித்தானியாவின் எச்.எம்.எஸ் கொன்கரர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் ஆர்ஜெண்டீனாவின் போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
2002 – கேரளாவில் பாலக்காடு நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 8 இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
2004 – நைஜீரியாவில் 630 முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டனர்.
2006 – குஜராத் மாவட்டத்தில் மசூதி ஒன்று இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலகத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
2009 – வல்லிபுரக்குறிச்சி மருதடி தான்றோன்றியீஸ்வரர் தேர்.

பிறப்புக்கள்

1921 – சத்யஜித் ராய், இந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 1992)
1969 – பிறயன் லாறா, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாளர்
1975 – டேவிட் பெக்காம், இங்கிலாந்து கால்பந்து ஆட்டக்காரர்
1983 – பொத்துவில் அஸ்மின், ஈழத்துக் கவிஞர்

இறப்புகள்

1519 – லியனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர் (பி. 1452)
2009 – கே. பாலாஜி, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்

சிறப்பு நாள்

போலந்து – கொடி நாள்
ஈரான் – ஆசிரியர் நாள்
இந்தோனீசியா – தேசிய கல்வி நாள்

LEAVE A REPLY