வரலட்சுமியுடனான கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

i3.phpகடந்த சில வருடங்களாக விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், நடிகர் சங்கத்தால் கட்டப்படும் கட்டிடத்தில் விஷால் – வரலட்சுமி திருமணம் தான் முதலில் நடக்கும் என்றும் செய்தி வெளியானது.

இருவரும் டுவிட்டரில் ஒருவரையொருவர் கலாய்த்தும் கொண்டிருந்தனர். மருது படத்திற்கு விஷால், சின்ன குழந்தைகள் போல் ஓவியம் வரைந்து கொண்டிர்ருக்கிறார் என்று வரலட்சுமி தன்னுடைய டுவிட்டரில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார். அதன் பிறகு மத கஜ ராஜா படத்தின் மூலம் ஒன்றாக சுற்ற ஆரம்பித்து விட்டனர்.

இந்நிலையில், இப்படத்தின் மூலம் இவர்களது நெருக்கம் அதிகமானதாகவும், இவருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் என்றெல்லாம் செய்தி வந்தது. தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஷால். நானும், வரலட்சுமியும் பள்ளியிலிருந்தே நண்பர்கள்.

அதன் பிறகு இப்போது காதலர்களாக மாறிவிட்டோம். எங்களது திருமணம் நடிகர் சங்கத்தால் கட்டப்படும் கட்டிடத்தில் நடக்கும். திருமணத்திற்கான தேதியையும் இப்போதே கார்த்தியிடம் சொல்லிவிட்டேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY