வரலட்சுமிக்கு கைகொடுக்கும் தனுஷ்

‘போடா போடி’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. இப்படத்தில் துறுதுறுவான நடிப்பால் இளைஞர்களை கவர்ந்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரைதப்பட்டை’ படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தந்தது.

தற்போது வரலட்சுமி சரத்குமார், ‘மாரி-2’, ‘கன்னிராசி’, ‘பாம்பன்’, ‘ நீயா-2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் வெல்வெட் நகரம் படத்தை அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் தனுஷ் நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘மாரி 2’ படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.