வட.மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக முறைப்பாடு

வடக்கு மாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுநரிடம் இன்று (புதன்கிழமை) காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவினால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் காரர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதியுள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே, வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவிற்கு எதிராக இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வட. மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும், கஞ்சா கடத்தல்காரர்களுக்கும் தொடர்பில்லையென குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கருத்து, மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்கும் செயற்பாடெனவும் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியே தவராசா மேற்படி முறைப்பாட்டினை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.