வட-கிழக்கு இணைப்பில்லாத புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு கோரி மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கும் சம்பந்தன்!

புதிய அரசியலமைப்புக்கு மகாநாயக்க தேரர்களின் ஆதரவு கோரி இம்மாத இறுதி வாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கவுள்ளார்.

புதிய அரசியலமைப்பினை உருவாக்கிய வழிநடத்தல் குழுவின் அறிக்கை எதிர்வரும் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்பின்னரே இரா.சம்பந்தன் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கவுள்ளார்.

புதிய அரசியலமைப்பில் வடக்குக் கிழக்கு இணைப்பில்லை, பௌத்தத்திற்கே முன்னுரிமை போன்ற விடயங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாத நிலையில் இவ்வரசியலமைப்புக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரியே இரா.சம்பந்தன் மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கவுள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கு மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் அரசமைப்பின் மறுசீரமைப்பு மாத்திரமே போதுமெனத்தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இடைக்கால அறிக்கையை மகா நாயக்க தேரர்களிடம் கையளித்து, தமிழ் மக்கள் பிரிவினையைக் கைவிட்டுள்ள நிலையில் புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளித்து இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தத் தவறிவிடவேண்டாம் எனக் கேட்டுக்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரா.சம்பந்தன் இந்து, கிறிஸ்தவ மதத் தலைவர்களையும்சந்தித்து இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவார் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

  1. போகும் பொழுது மறக்காமல் மலர்த்தட்டும் ஊதுபத்திகளும் கொண்டு போகச் சொல்லுங்கள். பிட்சை ஓட்டையும் கொடுத்து விட்டு வரட்டும்.

LEAVE A REPLY