வட்ஸ்அப் மீதான தடை இன்று நள்ளிரவு நீக்கப்படும்

சிறிலங்காவில் வட்ஸ்அப் சமூக வலைத் தளச் செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை இன்று நள்ளிரவுடன் நீக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கண்டியில் வன்முறைகள் வெடித்ததை அடுத்து கடந்த 7ஆம் நாள், முகநூல், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுடன், வட்ஸ்அப் மூலம் தகவல்களையும் படங்கள், காணொளிகளைப் பரிமாறிக் கொள்ளவும், பகிர்ந்து கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது.

நேற்று நள்ளிரவு வைபர் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில் இன்று நள்ளிரவில் இருந்து வட்ஸ்அப் மீதான தடையும் நீக்கப்படும் என்று சிறிலங்கா அதிபரின் செயலர் தெரிவித்தார்.

எனினும், முகநூல் மன்றும் இன்ராகிராம் போன்ற ஏனைய சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY