வடமாகாண சபையில் எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை – தமிழரசுக் கட்சி!

வடமாகாணசபையின் அமைச்சரவை மாற்றப்படும்பொழுது தமிழரசுக் கட்சி எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப்போவதில்லையென தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

நேற்று மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தமிழரசுக் கட்சி தெரிவித்திருப்பதாவது,

நேற்று முன்தினம் முதலமைச்சர் இல்லத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், வடமாகாண முதலமைச்சர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் ஆரம்பத்திலேயே வடமாகாண முதலமைச்சர் தமிழரசுக் கட்சியைப் பழிவாங்கும் முயற்சியல் ஈடுபட்டார்.

அத்துடன் அமைச்சரவை மாற்றத்தின்போதும் தமிழரசுக் கட்சியை முற்றாக ஓரங்கட்டுவதாகவே அவரது பேச்சு இருந்தது.

அமைச்சரவையை மாற்றியமைக்க முதலமைச்சருக்கு சகல உரித்தும் உண்டென்ற வகையில், அமைச்சரவையை மாற்றியமைக்கும்போது தமிழரசுக் கட்சி எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப்போவதில்லையெனவும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY