வடமாகாண ஆளுநர் விடுத்துள்ள விசேட பணிப்புரை

வடமாகாணத்தில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிலையகளுக்கும் மறு அறிவித்தல் வரும் வரை விடுமுறையளிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் ஏற்படகூடிய ஆபதில் இருந்து எமது மாணவ சமூகத்தை பாதுகாக்கும் நோக்கில் இன்று முதல் ஏப்ரல் 20 வரை இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் மாணவர்களுடைய நலனை மேலும் உறுதிபடுத்தும் பொருட்டு இந்த பணிப்புரையை அவர் விடுத்துள்ளார்.

இவ் ஒழுங்கினை உள்ளூராட்சி சபைகள் (மாநகர சபை, நகரசபை, பிரதேச சபைகள்) உரிய முறையில் மேற்பார்வை செய்து அர்ப்பணிபுடன் இதனை நடை முறை படுத்தும்படியும் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கௌரவ வடமாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.