வடமாகாணசபை உறுப்பினர் சயந்தனின் பாலியல் உரையாடலையடுத்து முகநூல் முடக்கம்!

வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் முகநூல் மூலம் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டதை ஊடகம் ஒன்று உறுதிப்படுத்தியதையடுத்து அவரது முகநூல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினருமான சயந்தன் ஒரு பெண் முகநூல் கணக்குடன் பாலியல் ரீதியான உரையாடலில் ஈடுபட்டிருந்தார். குறித்த முகநூல் பெண் தனக்கு சிறு வயது எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட செய்திகளை வெளியிட்ட ஊடகமானது தாம் வெளியிட்ட செய்திகள் தொடர்பில் தாம் முழுப்பொறுப்பு எடுப்பதாகவும் பிழையென நிருபிக்க இயலுமாயின் நிரூபிக்கலாம் எனவும் பகிரங்கமா சவால் விட்டுள்ளது.

இந்த சம்பவங்களின் பின்னர் சயந்தன் அவர்களின் முகநூலும் அவரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சமூகத்தின் இருப்பையே கட்டிக்காக்கவேண்டிய ஒரு மாகாணசபை உறுப்பினர், இவ்வாறு செயற்பட்டமையானது தமிழ் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாகும்.

இவரின் உறுப்புரிமையை மாகாணசபை உடனடியாக இரத்துச் செய்யவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY