வடசென்னை படத்தில் ரஜினி-அஜித்தை பின்பற்றும் தனுஷ்

கனடாவை சேர்ந்த இயக்குநர் கென் ஸ்காட் இயக்கத்தில் உருவாகும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’ என்ற படத்தை நடித்துள்ளார் தனுஷ்.

இதில் இவருடன் பெரனீஸ் பெஜோ மற்றும் எரின் மொரியார்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

இந்த ஹாலிவுட் படத்தை தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் 3 பாகங்களாக உருவாகி வருகிறது என்பது தங்கள் நினைவிருக்கலாம்.

இப்படத்தில் தனுஷ் சில முடிகள் நரைத்த தாடியுடன் நடித்து வருகிறாராம்.

தனுஷின் நரைத்த தாடி படத்தை #glitteringbearddhanush என்ற பெயரில் ஹேஷ்டேக் கிரியேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் இவரது ரசிகர்கள்.

கபாலி, காலா படங்களில் ரஜினியும் வீரம், வேதாளம் உள்ளிட்ட படங்களில் அஜித்தும் நரைத்த தாடியுடன் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY