வடக்கு மாகாண சபையின் 118வது அமர்வில் பாலா் கதை பேசி சிரிக்கும் உறுப்பினா்கள்!

வடக்கு மாகாண சபையின் 118 ஆவது அமா்வு இன்றையதினம்(13-03-2018) செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோது வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஷ்வரனுக்காக கூறிய கதை ஒன்றினால் சபையில் சிரிப்பொலி மேலெழுந்ததாக எமது செய்தியாளா் தெரிவித்தாா்.

வடக்கு மாகாண சபை உறுப்பினா் பசுபதிப்ளை கூறிய கதையினால் வடக்கு மாகாண கல்வி அமைச்சா் சா்வேஸ்வரனுக்கு, சொல் புத்தி, சுய புத்தி இல்லையா? என்ற கேள்வியும் மேலெழுந்தது.

வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இன்று 118 ஆவது அமா்வு இடம்பெறுகின்ற நிலையில் வடக்கில் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் எதிா்கொள்கின்றாா்கள், வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனைகளுக்கும் தீா்வுகள் எட்டப்படவில்லை.

இந்த நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினா்கள் பாலா் கதை பேசி சிரிக்கும் நிலை அதிருப்தியையே ஏற்படுத்துகின்றது.

LEAVE A REPLY