வடக்கு மாகாண ஆளுநராக சுரேஷ் ராகவன் நியமனம்!

வடக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் கலாநிதி சுரேஷ் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

03 மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இன்று (திங்கட்கிழமை) அவர் வடக்கு மாகாண ஆளுநராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஜனாதிபதி ஊடக பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.