வடக்கு மற்றும் கிழக்கிற்கு இரண்டு உதவி மாநாடுகள்

சர்வதேச உதவிகளை பெற்றுக்கொள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இரண்டு சர்வதேச உதவி மாநாடுகளை நடத்த எதிர்பார்ப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அவ்வாறான உதவி மாநாடுகளை நடத்தி அதனூடாக அந்த மாகாணங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (08) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.