வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சி ; தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு

DSC01188-1வடமாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு தொடர்பிலான தீர்மானத்துக்கு தேசிய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த வட மாகாண சபையின் தீர்மானம் ஒருதலைப்பட்சமானது என தேசியக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் உதுமா லெப்பை தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களும் தமிழர்களைப் போன்று தனித்துவமான தேசிய இனம் என்பதை மறந்து தமிழ் அரசியல் தலைமைகள் நடந்து கொள்வதாக கூறிய அவர் அதிகாரப் பகிர்வில், தமிழர் தரப்பு முஸ்லிம்கள் தொடர்பாக தனித்து தீர்மானங்களை எடுப்பது, ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை அக்கரைப்பற்று நகரில் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ எல் அதாவுலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரன தீர்மானம் பிரதானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு இரு மாகாணங்களும் இணைக்கப்படுமாயின் சம அந்தஸ்துடையதாக தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அதேபோல் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாகாணமும் அமையக் கூடியதாக மாகாண எல்லைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அந்தத் தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

  1. தேசியக் காங்கிரஸின் கொள்கை தமிழ் மக்களைப் புறக்கணித்து சிங்களத் தேசியம் பேசுவதாக இருந்தால் அதாவுல்லா போன்றோர் தமிழரின் முதுகில் சவாரி செய்யும் அரசியலில் ஈடுபடக் கூடாது. தமிழருடன் இணைந்து வாழ நினைத்தால் தமிழ் தலைமையுடன் இணைந்த ஒரு சமத்துவ உரிமை கொண்ட அரசியல் தீர்வுக்காகப் போராட முன்வரவேண்டும்.

    அவரது தேசியம் சிங்களத்தோடு இணைந்த ஒன்று என்றால் அதற்காகத் தமிழர் தரப்பை சிங்களத்திடம் அடிமைப் படுத்த முயலக் கூடாது. சிங்களம் முஸ்லீம்களுக்கு உரிய அரசியல் உரிமையை அதாவுல்லாவுக்கு கொடுக்க முன்வந்தால் தாராளமாக அவர் பெற்றுக் கொள்ளட்டும்.

    தடுப்பதற்கு எந்த ஒரு தமிழனும் முற்படமாட்டான் என்பதை அவரும் அவரை நம்பும் இஸ்லாமிய மக்களும் உறுதியாக நம்பலாம். இலங்கை அரசியலில் முதலில் சிங்களம் கை வைத்தது முஸ்லீம்கள் மீதுதான் 1915ல். அதன் பின்னர்தான் மலையாளிகள் மீதும் மலையகத் தமிழர் மீதும் இலங்கைத் தமிழர் மீதும் என்பதை அதாவுல்லா போன்ற சிந்தனா வாதிகள் நினைவில் கொள்வது நலம் என நம்புகிறேன்.

LEAVE A REPLY