வடக்கு- கிழக்கில் தனித்து களமிறங்குகிறது சுதந்திரக்கட்சி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடுவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அக்கட்சியின் பிரதி தவிசாளரான இராஜாங்க அமைச்சரான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணி அமைக்கும்போது பொதுவான சின்னத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்

ஆனாலும் கூட்டணியில் சேர்கின்ற எந்ததொரு கட்சியினதும் சின்னத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட முடியும்.

ஆனாலும் ஒரு சிலர் சின்னத்தை காரணம் காட்டி கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த முனைகின்றனர்.

இதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுனவை விட எமது கட்சியே அதிகளவு வாக்குகளை பெற்றிருந்தது.

எனவே பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் மாத்திரம் வேறு சின்னத்திலும் ஏனைய பகுதிகளில் பொதுஜன முன்னணியின் மொட்டுச் சின்னத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.