வடக்கு உட்பட நான்கு மாகாணங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள செயற்பாடு- விரைவில் நாடளாவிய ரீதியில்

வடக்கு, சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில கல்வியை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்ப உதவிகளுடனான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக SMART ஆங்கில வகுப்பறைகளை (English Smart Class) ஸ்தாபித்து, ரைட் டு றீட் (Right to Read) திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சு செயற்படுத்தி வருகிறது.

தரம் 3 முதல் தரம் 8 வரையான வகுப்புகளுக்கு ஆங்கில பாடவிதானங்களை தயாரித்து, அதனை இணைய வழியாக மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்லவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, நாடு பூராகவும் உள்ள 837 பாடசாலைகளில் சுமார் 510,745 மாணவர்கள் இந்த திட்டத்தின் ஊடாக தற்போது நன்மை பெற்று வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டாகும் போது, இந்த திட்டத்தை நாடு பூராகவும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் அடுத்தகட்டமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது

தென் மாகாணத்தில் காலி மாவட்டத்திலுள்ள சுமார் 100 பாடசாலைகளுக்கு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதன்பின்னர், இரண்டாம் கட்டத்தில் தென் மாகாணத்தில் மேலும் 100 பாடசாலைகள், இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளன.