வடக்கு ஆளுநர் பௌத்த மயமாக்களுக்கு துணை போக கூடாது: வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பௌத்தமயமாக்களுக்கு துணை போகாமல் சிந்தித்து செயலாற்ற வேண்டுமென வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சர்வேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர். ஆகையால் அவரின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே அதிக அக்கறை செலுத்துவார். மேலும் வடக்கு ஆளுநர் அதிகமாக பௌத்த மதத்தை கற்றவரென்பதால் அந்த மதம் சார்ந்த செயற்பாடுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது. இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரும் வடக்கில் 1000க்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகளை அமைப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார்கள். இது அறிவுபூர்வமான கூற்றாக இருக்கவில்லை. மதவெறியை உள்நோக்காக கொண்டு பேசிய கருத்தாகவே இதனை பார்க்கின்றோம். அதேபோன்று இன்றைய காலத்தில் துறவு கோலத்திலுள்ள புத்த பிக்குகள் துறவு என்ற முகமுடியை அணிந்துகொண்டு அதிகார மோகம் உடையவர்களாக காணப்படுகின்றார்கள். இவ்வாறு கௌதம புத்தரின் நோக்கத்துக்கு நேர்மாறாகவே பௌத்த பிக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றார்கள். ஆகையால் வடக்கு ஆளுநர், பௌத்தத்துக்கு அடிமைப்பட்டு, வடக்கை சிங்களமயமாக்கும் கீழ்த்தரமான செயற்பாட்டுக்கு உதவக்கூடாது” என கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். எச்சரிக்கை

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பௌத்தமயமாக்களுக்கு துணை போகாமல் சிந்தித்து செயலாற்ற வேண்டுமென வடக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சர்வேஸ்வரன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வடக்கு ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர். ஆகையால் அவரின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலேயே அதிக அக்கறை செலுத்துவார்.

மேலும் வடக்கு ஆளுநர் அதிகமாக பௌத்த மதத்தை கற்றவரென்பதால் அந்த மதம் சார்ந்த செயற்பாடுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய இருவரும் வடக்கில் 1000க்கும் மேற்பட்ட பௌத்த விகாரைகளை அமைப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார்கள்.

இது அறிவுபூர்வமான கூற்றாக இருக்கவில்லை. மதவெறியை உள்நோக்காக கொண்டு பேசிய கருத்தாகவே இதனை பார்க்கின்றோம்.

அதேபோன்று இன்றைய காலத்தில் துறவு கோலத்திலுள்ள புத்த பிக்குகள் துறவு என்ற முகமுடியை அணிந்துகொண்டு அதிகார மோகம் உடையவர்களாக காணப்படுகின்றார்கள்.

இவ்வாறு கௌதம புத்தரின் நோக்கத்துக்கு நேர்மாறாகவே பௌத்த பிக்குகள் நடந்துகொண்டு இருக்கின்றார்கள்.

ஆகையால் வடக்கு ஆளுநர், பௌத்தத்துக்கு அடிமைப்பட்டு, வடக்கை சிங்களமயமாக்கும் கீழ்த்தரமான செயற்பாட்டுக்கு உதவக்கூடாது” என கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.