வடக்குடன் உறவுகளை விரிவுபடுத்த சீன தூதுவர் திட்டம்

சிறிலங்காவுக்கான சீன தூதுவர் செங் ஷியுவான் வடக்கு மாகாணத்தில் இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சீனத் தூதுவருடன், தூதரகத்தின் முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றும் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்தது.

இந்தக் குழுவினர், யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக நிறுவனங்களுக்குச் சென்றதுடன், ஊடகங்களின் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். அத்துடன் வேறு பல தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தினர்.

பலாலி படைத் தளத்தில், யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷண ஹெற்றியாராச்சியையும் சீன தூதுவர் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

வடக்கிலுள்ள மக்களுடன், கல்வி, கலாசார, பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கிலேயே சீன தூதுவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.

மன்னாருக்கும் பயணம் மேற்கொள்ள சீன தூதுவர் அங்கு சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை நடத்தியுள்ளார்.