வடக்கில் தொழிற்பேட்டைகள் ஆரம்பிக்கப்படும்

வடமாகாணத்தின் அனைத்து உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும் தொழிற் பேட்டைகளை ஆரம்பிப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட உதா கம்மான திட்டத்தை பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

173 இலட்சம் ரூபா செலவில் யாழ்ப்பாணம், வலிகாமம், கிழக்கு – ஊரெழுப் பகுதியில் பொக்கனை கிராமத்தை பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கும் வைபவம் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இடம்பெற்றது.

´செமட செவன´ வீட்டுத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 274 வது உதா கம்மான திட்டம் இதுவாகும்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் வடமாகாணத்தின் அனைத்து உதவி அரசாங்க அதிபர் பிரிவிலும் தொழிற் பேட்டைகளை ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளார்.