வடக்கிற்குப் படையெடுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகள்

ஐ.நா மனித உரிமைகள். பேரவையில் சிறிலங்கா குறித்த முக்கியமான விவாதம் நடக்கவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் வடக்கிற்குப் படையெடுத்து வருகின்றன.

கடந்த சில நாட்களில் அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ், பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ், சீன தூதுவர் செங் ஷி யுவான், நெதர்லாந்து தூதுவர் ஜோன்னே டோர்னிவேர்ட், சுவிஸ் வெளிவிவகார அமைச்சின் சமஷ்டி திணைக்களத்தின் மூத்த ஆலோசகர் மார்ட்டின், ஸ்ரோர்சிங்கர், நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மரியன் ஹகென் உள்ளிட்ட பலர் வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் வடக்கு ஆளுநர், யாழ். படைகளின் தளபதி, சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான அறிக்கை மீத வரும் 20ஆம் நாள் விவாதம் நடத்தப்படவுள்ளது.

அதன் பின்னர் சிறிலங்கா தொடர்பான தீர்மானமும் முன்வைக்கப்படவுள்ளது. இந்த நிலையிலேயே வடக்கு நோக்கி வெளிநாட்டு இராஜதந்திரிகள் படையெடுத்து வருகின்றனர்.