வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னுடன் கண்டிப்பாக தொலைபேசியில் பேசுவேன் டொனால்டு டிரம்ப்

கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றத்தை அதிகரித்து வரும் வடகொரியா தனது ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகளை கைவிட மறுத்து வருகிறது.

வடகொரியாவின் இந்த அடாவடித்தனத்தால் மிகுந்த கோபம் அடைந்துள்ள அமெரிக்கா, வடகொரியாவுக்கு மிரட்டல்களை விடுத்தது. பொருளாதார தடைகள் மற்றும் தனிமை படுத்தல் ஆகிய நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்காவிற்கு எந்தஒரு பலனும் கையில் எட்டவில்லை. இன்றுவரையில் வடகொரியா தன்னுடைய பாதையை விட்டு விலகியதாக தெரியவில்லை. புத்தாண்டு தினத்தன்று உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவை தாக்கி அழிப்பதற்கான அணு ஆயுதங்களும், அந்த ஆயுதங்களை அமெரிக்கா வரை ஏந்திச்செல்லக்கூடிய ஏவுகணைகளும் தங்களிடம் இருப்பதாகவும், இவற்றை இயக்குவதற்கான பொத்தான் தனது மேஜையில் எப்போதும் தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

வடகொரியாவின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் தன்னிடம் எப்போதும் அணு ஆயுதங்களை இயக்க கூடிய பொத்தான் இருப்பதாக கூறி உள்ளார். அவரிடம் இருப்பதை விட மிகவும் பெரிதான சக்தி வாய்ந்த அணு ஆயுத கட்டுப்பாடு அமெரிக்காவிடம் இருப்பதை, மக்களிடம் பட்டினியால் தவிக்க விட்டு அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் வடகொரிய அதிபரிடம் சொல்லுங்கள் என தெரிவித்து இருந்தார். இவ்வாறாக இரு தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியது.

இந்நிலையில் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னுடன் கண்டிப்பாக தொலைபேசியில் பேசுவேன் என டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார்.

வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னுடன் பேசுவதற்கு முற்றிலும் தயாராக உள்ளேன் என கூறிஉள்ள டொனால்டு டிரம்ப், வடகொரியா மற்றும் தென் கொரியா இடையிலான பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாக குறிப்பிட்டு உள்ளார். பேச்சுவார்த்தைக்கு ஆதரவு தெரிவித்து உள்ள டொனால்டு டிரம்ப், முன்நிபந்தனைகள் இல்லாமல் இருக்காது எனவும் கூறிஉள்ளார்.

LEAVE A REPLY