வடகொரியாவில் அணுகுண்டு சோதனை வெற்றி விழா

வடகொரியா கடந்த 3–ந் தேதி 6–வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதன் காரணமாக வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பதற்கான வரைவு மசோதாவை அமெரிக்கா தயாரித்து பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகள் இடையே சுழற்சிக்கு விட்டுள்ளது.

ஆனால் வடகொரியா எதற்கும் அசைந்து கொடுப்பதாக இல்லை.

இந்த நிலையில் அணுகுண்டு சோதனை வெற்றி விழாவை வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பியாங்யாங் நகரில் நடத்தி உள்ளார். விஞ்ஞானிகளை அவர் மனமார பாராட்டினார். அப்போது அவர், ‘‘ சமீபத்தில் நடத்திய ஹைட்ரஜன் குண்டுசோதனை அபார வெற்றி பெற்றிருக்கிறது. இது வட கொரிய மக்களின் ரத்தத்தை விலையாகக் கொடுத்து பெற்ற வெற்றி’’ என்று கூறினார்.

விழாவின் போது இசை நிகழ்ச்சி இடம் பெற்றது. விஞ்ஞானிகளுக்கு கிம் ஜாங் அன் விருந்து அளித்து கவுரவித்தார். அது மட்டுமின்றி விஞ்ஞானிகளுடன் அவர் புகைப்படமும் எடுத்துக்கொண்டார் என வடகொரியா அரசு ஊடகம் தெரிவிக்கிறது.

இந்த வெற்றி விழா எப்போது நடந்தது என கூறப்படவில்லை. இருப்பினும் இது நேற்று முன்தினம் நடந்திருக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY