வடகிழக்கில் மொட்டு இலலை:வெற்றிலையாம்?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொதுஜனபெரமுன யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் சில பகுதிகளில் போட்டியிடுவதில்லையென தீர்மானித்துள்ளது.ஆயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சில மாவட்டங்களில் வெற்றிலைச் சின்னத்தில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட பெரும்பாலும் சந்தர்ப்பம் இருப்பதாக சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தரியாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பெர்ஜனபெரமுன கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபாய வடகிழக்கில் படுதோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.