வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு கைது வாரண்டு

வங்காள தேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா. இவர் வங்காள தேச தேசிய கட்சியின் தலைவராக இருக்கிறார். மேலும் எதிர்க்கட்சி தலைவராகவும் உள்ளார்.

இந்த நிலையில் இவர் மீது 2 கோர்ட்டுகள் கைது வாரண்டு பிறப்பித்துள்ளன. அவரது வழக்கு விசாரணைக்காக அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அதற்காக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழல் வழக்கு விசாரணையில் ஆஜராக கலிதாஜியாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கும் அவர் நேரில் ஆஜராகவில்லை. எனவே இந்த வழக்கிலும் அவருக்கு கைது வாரண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை வங்காள தேச அரசு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வங்காள தேசத்தில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் கலிதாஜியா மீது கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்டது என அவரது கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY