ரோடு போடும் இயந்திரத்துடன் இந்திய எல்லைக்குள் புகுந்த சீன ராணுவம்

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு இரு நாடுகளும் ராணுவத்தை குவித்தன. இதனால் அங்கு 4 மாதங்களுக்கு முன் 2 மாதமாக போர்ப்பதற்றம் நீடித்தது. பின்னர் இரு நாட்டு தரப்பிலும் பேசபட்டதை தொடர்ந்து இரு நாட்டுபடைகளும் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் சீன ராணுவம் சாலை உபகரணங்கள் மூலம் அருணாச்சல பிரதேசத்திற்குள் ஊடுருவியது.

டிசம்பர் மாத இறுதியில், அருணாச்சல பிரதேசத்திற்குள் 200 மீட்டர் இந்திய எல்லைக்குள் சீன தரைப்படையை சேர்ந்த சீன வீரர்கள் ஊடுருவினர். அப்பகுதியில் உள்ள இந்திய எல்லைப் பகுதியிலுள்ள கமேல் சியாங் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்குள் ஊடுருவினர். அவர்களை இந்திய ராணூவம் தடுத்து நிறுத்தியது.

இத்தகவலை எல்லைப் பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

இந்திய வீரர்கள் சீன ராணூவ வீரர்களை எதிர்கொண்டனர் மற்றும் இரண்டு சாலை கட்டுமான இயந்திரங்கள் கைப்பற்றி உள்ளனர் என உள்ளூர் வாசிகள் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. வடகிழக்கு இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

அருணாச்சல பிரதேச சாலைகளை மற்றும் பாலங்களை அபிவிருத்தி செய்வதில் அரசு மந்தமாக செய்ல்படுகிறது. இது இந்தியாவின் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு சீனாவுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. சீனா பல இடங்களில் எல்லைக்கு இரண்டு சாலையை ஏற்கனவே கட்டியுள்ளனர்.என பசுமை ஆர்வலரும் வக்கீலுமான விஜய் தாரம் கூறி உள்ளார்.

LEAVE A REPLY