ரெலோவிலிருந்து விலகும் மற்றுமோர் உறுப்பினர்! உறுதிப்படுத்திய செல்வம்!

தமிழீழ விடுதலை இயக்கம், டெலோ கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து விலகிக்கொள்வது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வழங்கியுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் மனோ ஐங்கர சர்மா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட சைவ மக்களின் சுய கௌரவ உரிமைகளுக்காகவும், அவர்களின் அபிலாசைகளுக்காகவும் கடந்த 1 ஆம் திகதி தொடக்கம் நான் அங்கம் வகித்த டெலோ கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகிக்கொள்ளுகின்றேன் என எழுத்து மூலம் அறிவித்துள்ளேன் என தெரிவித்தார்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியுடவுள்ள நிலையில் தான் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்விடையம் தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனை வினவிய போது,

கட்சியில் இருந்து விலகிக்கொள்வது தொடர்பாக மன்னார் நகர சபை உறுப்பினர் மனோ ஐங்கர சர்மா கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார் என்பதை உறுதிபடுத்தியுள்ளார்.