‘ரெட் அலர்ட்’ – அரசின் நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம்

ரெட் அலர்ட் எச்சரிக்கை தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை ராஹ்பவனில் ரெட் அலர்ட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முதல்-அமைச்சர் பழனிசாமி சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

3 நாட்கள் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பால் எடுக்கப்படும் நடவடிக்கை பற்றி முதல்-அமைச்சர் எடுத்துரைத்தார். இந்த சந்திப்பின் போது தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஆளிநரின் செயலாளர் உடன் இருந்தனர்.

சட்டம் – ஒழுங்கு நிலை 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் வெளியாகவுள்ள உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.