ரூ.20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்தல் செலவினங்களை வேட்பாளர் வங்கி கணக்கு மூலமே மேற்கொள்ள வேண்டும் : ஆணையம் உத்தரவு

Daily_News_5456463098527வேட்பாளர்கள் ரூ.20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்தல் செலவினங்களை வங்கி கணக்கு மூலமே மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆணையத்தின் உத்தரவு: அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நிலையிலேயே தனியாக தேர்தல் செலவினங்களுக்கென புதிய சேமிப்பு கணக்கு துவங்கிட வேண்டும். இந்த வங்கி கணக்கு வேட்பாளர் பெயரிலோ அல்லது அவரது முகவரின் பெயரிலோ அல்லது இருவரின் பெயரிலோ இருக்கலாம். ஆனால் வேட்பாளர்களின் உறவினர்களின் பெயர்களில் கணக்கு வைப்பது அனுமதிக்கப்படவில்லை. அதன் விவரத்தை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

அவற்றை பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பெற்று பராமரிப்பதுடன், வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களின் பட்டியலையும் தம்வசம் வைத்திருந்து நிழல் கண்காணிப்பு பதிவேடு மற்றும் வேட்பாளரின் செலவின பதிவேட்டினையும் வேட்பாளரோ, அவரது முகவரோ கொண்டுவரும் நிலையில் அதை சரி பார்க்கவேண்டும் வித்தியாசம் இருப்பின் உதவி தேர்தல் செலவின பார்வையாளரிடம் தெரிவித்து மேல் நடவடிக்கை தொடரவும் வேண்டும். ரூ.20 ஆயிரத்திற்கு மேற்பட்ட செலவினங்கள் அனைத்தும் வேட்பாளர் சேமிப்புக்கணக்கு வழியாக மேற்கொள்ள வேண்டும். ரூ.20 ஆயிரத்துக்கு கீழான சிறு செலவினங்கள் உரிய செலவின வவுச்சர்களின்படி மேற்கொள்ளலாம். வேட்பாளருடைய கணக்கில் வரவு செலவினங்கள் அனைத்திற்குமான ஆவணங்களை ஆவணக்கோப்பாக தனியே பராமரிக்க வேண்டும். வேட்பாளர்கள் தங்களது பதிவேடுகளை குறைந்தது 3 முறையாவது தேர்தல் செலவின பார்வையாளர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட இதர அலுவலருக்கு ஆய்வுக்காக காண்பிக்க வேண்டும். எனவே தேர்தல் தொடர்பான அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரிக்க படவேண்டும்.

LEAVE A REPLY