ரீமேக்கில் நடிக்க மறுக்கும் மெட்ராஸ் நாயகி

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் அற்முகமானார். அதற்கு முன்னர் சில தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது கலகலப்பு 2, கதாநாயகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கு முன் வெளியான படம் கணிதன். இந்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்தார்.

இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பேச்சு நடந்தது. தெலுங்கு ரீமேக்கில் கேத்ரின் தெரசாவே ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிவது, ஆனால், இதை மறுத்துள்ளார் கேத்ரின்.

இது குறித்து கேத்ரின் கூறியதாவது, கணிதன் ரீமேக்கில் நடிக்க கேட்டு என்னை யாரும் அணுகவில்லை. அது வெறும் வதந்தி. தமிழில் இப்படம் வெளியானபோது எனது காட்சிகள் நிறைய வெட்டப்பட்டுவிட்டது.

தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பு வந்தாலும் எனது காட்சிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அதில் நடிப்பதுபற்றி ஆலோசிப்பேன் என்றும் அவர் கூறி உள்ளார்.

LEAVE A REPLY