ரிஷாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை – திகதி குறித்து எவ்வித இறுதி முடிவும் இல்லை

அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான திகதி குறித்து எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் கட்சித்தலைவர்கள் கூட்டம் ஆரம்பமாகி இருந்தது.

சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான திகதி குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறயினும் தற்போது சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் ஒன்று கூடியுள்ளது.

இதன்போது ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தை ஜூன் மாதம் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவைத்தலைவர் லக்ஷமன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஜூன் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் குறித்த விவாதத்தை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.