ரிஷாட்டை காப்பாற்றும் அரசாங்கம் – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூன் மாதம் வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளமை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவிப்பதற்கான செயற்பாடு என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் இதற்காவே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை விசாரணை செய்ய நாடாளுமன்ற சிறப்பு தேர்வுக்குழு நியமிக்கப்பட்டது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் இடைக்கால அறிக்கை ஒன்றை அரசாங்கம் பெறவுள்ளது இதனை அடுத்து ரிஷாட் மீதான குற்றச்சாட்டுக்களை நியாயப்படுத்தும் நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு விவாதத்திற்கான திகதி பிற்போடப்பட்டுள்ளமையினால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை ஆவதற்கு ரிஷாட்டுக்கு கிடைத்த வாய்ப்பு இது என்றும் என தெரிவித்துள்ளார்.