ரிஷாடை கைதுசெய்ய பிடியானை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்தின் ஊடாக பிடியானை ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பொதுமக்களின் பணத்தை தவறான முறையில் பயன்படுத்தி மற்றும் தேர்தல் சட்ட திட்டங்களை மீறி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பதற்காக இடம்பெயர்ந்தோரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் ஊடாக அழைத்து சென்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.