ராணுவம் அதிரடி காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

Daily_News_2294536828995குடியரசு தினத்தையொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க எல்லை பகுதியில் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தெற்கு காஷ்மீர், அனந்னாக் மாவட்டத்தில் உள்ள கல்ஹால் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் விரைந்து சென்றனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இருதரப்பினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. அதிகாலை 4 மணி அளவில் நடந்த சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.

அவனிடம் இருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில தீவிரவாதிகள் தப்பியிருக்கலாம் என தெரிகிறது. ராணுவ வீர்கள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். குடியரசு தினத்தையொட்டி, காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர். சம்பவம் நடந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY