ராஜித தொடர்ந்தும் மருத்துவமனையில்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மன அழுத்தம், அதிர்ச்சி, உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக, அவரைப் பரிசோதித்த மருத்துவர் உமாசங்கர் தெரிவித்துள்ளார் என பிரதி சொலிசிற்ற ஜெனரல் திலீப் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே அவரை தொடர்ந்தும் மருத்துவமனையிலேயே எதிர்வரும் 30ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் சாலினி பெரேரா உத்தரவிட்டுள்ளார்.