ராஜபக்ஷ அரசால் ஏமாற்றப்பட்ட மைத்திரி!

புதிய அமைச்சரவை கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையிலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்த அமைச்சுப் பதவியும் கிடைக்கவில்லையென பரவலாக பேசப்படுகிறது.

புதிய அமைச்சரவையில் 28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.

இருப்பினும் பொலனறுவை மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்த அமைச்சுப் பதவியும் கிடைக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று அமைச்சுப் பதவி தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியிருந்தது.

எனினும் இன்று பதவியேற்றவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.