ராஜபக்ஷேக்களை பிரதமரே காப்பாற்றி வருகிறார்: அசாத் சாலி குற்றச்சாட்டு

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தை ஊழல் மோசடிகளில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக காப்பாற்றி வந்துள்ளார் என்று மேல்மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி குற்றம் சுமத்தினார்.

கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டில் அநியாயங்களை அரங்கேற்றியவர்களுக்கு இதுவரை எந்த அரசாங்கத்திலும் தண்டனை வழங்கப்படவில்லை.

இவ்வளது காலமாக ராஜபக்ஷ குடும்பத்தினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் காப்பாற்றப்பட்டுள்ளனர். அதற்கு அவர்கள் பிரதமரை வணங்க வேண்டும்.

ஆனால், இனியும் அவர்கள் தப்பிக்க முடியாது. அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். அதனை காண்பதற்கே மக்கள் காத்திருக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.