ரஷ்யாவின் மிக்-29 ரக போர் விமானம் விபத்து: அதிஷ்டவசமாக உயிர்தப்பிய விமானிகள்!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுகோவ்ஸ்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மிக்-29 ரக போர் விமானம், விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தில் பயணம் செய்த விமானிகள் இரண்டு பேரும் வெளியே குதித்து அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்த விமானிகளில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விமானமானது இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டு, டிமிட்ரோஸ்கோவிய் எனும் கிராமத்திக்கு அருகே உள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

மிக் ரக போர் விமானங்கள் 1982 ஆம் ஆண்டு முதல் ரஷிய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.